ஏ.எல்.டி நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைதுக்கு காவல் துறை கூறுவதென்ன?

Update: 2022-06-28 12:26 GMT

ஏ.எல்.டி நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் மதரீதியாக மக்களின் மனதை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜுபைரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி காவல்துறையினர் ஒருநாள் ரிமாண்டில் எடுத்துள்ளனர். ஜுபைர் சார்பாக கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.



முகமது ஜுபைர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி இழிவாக பேசியதாக அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டார், இந்த ட்விட்டர் பதிவு 2018'ஆம் ஆண்டு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் கூறும்பொழுது, 'ஜுபையரால் பதியப்பட்ட அந்த குறிப்பிட்ட பதிவு ஒரு மதத்தினரை காயப்படுத்துவதாகவும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகவும் அந்த வெறுப்புணர்வு சமூக சீர்கேட்டை ஏற்படுத்தலாம் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதால் தற்போது ஜுபைரை கைது செய்துள்ளோம்' என தெரிவித்துள்ளனர்.



Source - Junior Vikatan

Similar News