ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடைசெய்யப்பட்ட சுதந்திரப் போராட்ட கவிதைகள் - மோடி அரசால் மீட்டெடுப்பு!

Update: 2022-07-11 14:24 GMT

புதுடில்லி: பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களால் எழுதப்பட்ட உணர்ச்சிமிக்க  கவிதைகளை ஆங்கிலேயர்கள் தடைசெய்தனர். அத்தகைய உணர்ச்சிமிக்க கவிதைகள், மீண்டும் மோடி அரசாங்கத்தின் முயற்சிகளால் மக்களிடம் சென்று சேரவுள்ளது.


கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் பாரத நாட்டை சுரண்டி தங்கள் நாட்டு மதிப்பை கூட்டிக்  கொண்டனர் வெள்ளையர்கள். அதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது நிலையான ஆட்சியை நாடு முழுவதும் விரிவு செய்து, நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக உறிஞ்சியது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு,  ரத்தமும் வேர்வையும் உறிஞ்சப்பட்டு அநீதி வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அப்போது வீரத்தின் உருவமாய் சுதந்திர வேட்கை கொண்டு எழுந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும்  சிந்தனையாளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்களை ஒன்றுதிரட்ட ஆரம்பித்தனர்.


நாட்டு மக்களிடம் சுதந்திர என்னத்தை விதைக்க, சுதந்திர போராட்ட  வீரர்கள் தங்களின்  எழுத்துக்களால்   உணர்ச்சிமிக்க கவிதைகளை தீட்டினர். அத்தகைய கவிதைகள் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. இந்தியர்களின் ரத்தத்திற்க்கு அஞ்சாத சர்வ வள்ளமை படைத்த ஆங்கிலேய அரசு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேனா 'மை'க்கு அஞ்சியது!


அத்தகைய தடைசெய்யப்பட்ட சுதந்திரப் போராட்டக் கவிதைகளை,   மக்களிடையே சென்று சேரும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இனையதள பக்கத்தில் "சுதந்திர ஸ்வார்" என்ற பிரிவின் கீழ், தமிழ்,இந்தி,பெங்காலி,மராத்தி,குஜராத்தி,பஞ்சாபி,மலையாளம்,கண்னடம்,தெலுங்கு போன்ற இந்திய பிராந்திய மொழிகளில்  கவிதைகள் இடம்பெறவுள்ளன. பிரதமர் மோடி உட்பட பல முக்கிய ஆளுமைகள், அக் கவிதைகளை வாசிக்க உள்ளனர்.  அதன் மூலம் பெரும்பான்மை மக்களிடம் அக்கவிதைகள்  சென்று சேரும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நம் சுதந்திர போராட்ட வீரர்களின் கவிதைகளை மீண்டும் வாசிப்போம்...நம் சுதந்திரத்தை சுவாசிப்போம்.

TFI Post

Tags:    

Similar News