பாதுகாப்புத்துறையில் ஏற்றுமதியாளராக முன்னேறியுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2022-07-19 02:39 GMT

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது பாதுகாப்புத்துறையில் ஏற்றுமதியாளராக நாம் முன்னேறியிருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியாவின் பாதுகாப்புத்துறை மிகவும் வலுவாக இருந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், இரண்டாம் உலகப் போரின்போது நாம் பாதுகாப்பு துறையில் ஒரு இறக்குமதியாளராக இருந்தோம். போதைக்கு அடிமையானவர்கள் போல நாம் ஒரு சாதாரன பாதுகாப்பு பொருட்களுக்கு கூட வெளிநாட்டை சார்ந்திருந்த பழக்கத்தை வளர்த்துக் கொண்டோம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகவே இருந்தோம்.

ஆனால் இன்று கடந்த 45 ஆண்டுகளில் குறுகிய காலத்திலேயே நம்முடைய பாதுகாப்பு இறக்குமதிக்கு சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் நாம் முன்னர் பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த தற்போது பாதுகாப்புத்துறை ஏற்றுமதியாளராக முன்னேறியிருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Similar News