மலைவாழ் வகுப்பை சேர்ந்த இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார்!
இந்திய நாட்டின் மலைவாழ் மக்கள் வகுப்பை சேர்ந்த முதன் முதலாக மிகவும் உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக திரவுபதி முர்மு 64, இன்று பதவியேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பதற்கு முன்னர் டெல்லி ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் வீரர்கள் புடைசூழ வரவேற்று அழைத்து செல்லப்பட்டார்.
மைய மண்டபத்தில் 10.15 மணிக்கு நடந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar