புனித யாத்திரை செல்பவர்களுக்கு ஏதுவாக, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுத்த இந்திய ராணுவம்!

Update: 2022-08-01 10:47 GMT

ஜம்மு & காஷ்மீர்: மச்சைல் மாதா ஆலயத்திற்கு, புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக, 170 அடி பெய்லி பாலம் அமைத்துக் கொடுத்தது இந்திய ராணுவம்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கிஷ்துவார் மாவட்டத்திலுள்ள 'மச்சைல்' எனும் கிராமத்தில், 'மச்சைல்' எனும் துர்கை அம்மன் கோயில் உள்ளது. இது மலைக் கோயிலாகும்.




 

அம்மனை வழிபட 32 கிலோமீட்டர் மலை பயணம் செய்து அக்கோயிலை பக்தர்கள் அடைவார்கள். இவ்வாலயத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெருமளவு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா காரணமாக, மச்சைல் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த வருடம் மச்சைல் புனித யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவில் யாத்ரீகர்கள் வருகை தருவதால், அவர்களின் புனித யாத்திரையை எளிதாக்க இந்திய ராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து, ஆற்றின் குறுக்கே 170 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை அமைத்துள்ளது.


இராணுவத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைத்துக் கொடுத்த இப்பாலம், புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

Swarajya

Tags:    

Similar News