இந்திய தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது - அசத்தும் நிதி அமைச்சர்!
உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா இருப்பதாகவும். இந்திய தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
"இந்தியா நடப்பு ஆண்டில் 7% பொருளாதார வளர்ச்சியை காணும். இது மற்ற நாடுகளை விட அதிகம். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன" என்றார்.
நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் அம்ரித் கால் இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்றால் புதிய தொடக்கம் என்று பொருள். இந்தியா @100 என்ற இலக்கை முன்வைத்து புதிய பாய்ச்சலுக்கு முன்னெடுக்கும் பட்ஜெட் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கான வலிமையும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நிறைய வாய்ப்புகளையும் இந்தியப் பொருளாதாரம் கொண்டிருக்கிறது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
11.74 கோடி வீடுகளுக்கு டாய்லெட், 9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்ஷன், 47.5 கோடி ஜன் தன் வங்கிக் கணக்கு,
44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.