பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம் - அடுத்தடுத்து வெளியாக உள்ள அறிவிப்புகள்!
பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
செயற்கை வைரங்களை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யப்படும். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், சிறு குறு தொழில்முனைவோருக்கு இது பெரியளவில் உதவும்.
இயற்கை விவசாயத்தில் 1 கோடி விவசாயிகளை ஈடுபடுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் கணிணிமயமாக்கப்படும்.
மாநிலங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தேவையான கடன்களைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும்.வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி மற்றும் விவசாயிகளுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.