காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீ வைக்கப்பட்ட இந்திய தூதரகம்... இந்தியா கடும் எதிர்ப்பு..

Update: 2023-07-05 07:30 GMT

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய மற்றும் அமெரிக்க இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்திருக்கிறார். இந்நிலையில் இதனை பொறுக்காத காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இத்தகைய சம்பவங்களின் களமிறங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்துள்ளனர். குறிப்பாக நள்ளிரவில் தூதரத்தை சுற்றிவளைத்த மர்ம நபர்கள் எரியும் பொருளைக் கொண்டு அங்கு இருந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் முற்பட்டார்கள்.


இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வன்முறை செயலுக்கு காரணமாக நபர்களை தேடும் பணியில் அமெரிக்கா போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாத அமெரிக்க தரப்பில் இதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News