வடமாநிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு... பிரதமர் தலைமையில் தீவிர ஆய்வு...

Update: 2023-07-12 04:50 GMT

வடமாநிலங்கள் குறிப்பாக வடமாநில குளிர் பிரதேசமான இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியான மழை நீடித்து வருகிறது. இந்த மாலை காரணமாக வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் தத்தளித்து வருகிறது. எனவே இத்தகைய மாநிலங்களுக்கு உரிய உதவிகள் உடனடியாக அளிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதி அளித்து இருக்கிறார். சிம்லா மாவட்டத்தில் 120 சாலைகள் தற்போது முடக்கப்பட்டு இருக்கிறது. 484 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாது முதலமைச்சர் ஆகியோருடன் பிரதமர் நேரடி தொடர்பில் இருந்து மாநிலங்களின் நிலவரம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்து இருக்கிறார்.


நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் நிலைமையைப் பிரதமர் ஆய்வு செய்தார். மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசினார். நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வுசெய்தார்.


பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது, "நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகங்கள், தேசியப் பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப்படையின் அணிகள் பணியாற்றுகின்றன" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News