விண்வெளி துறையில் உலகின் முதன்மை தேசமாக உருவெடுக்க இருக்கும் இந்தியா - மத்திய மந்திரி தகவல்!

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் உலகின் முதன்மை தேசமாக உருவெடுக்கும் என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-15 08:30 GMT

மதியம் விண்வெளித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது :-

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் விண்வெளி ஆராய்ச்சியின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார் . இதனால் 100க்கும் அதிகமான புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சி துறையில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றன. சந்திராயன்-3 திட்டம் சுமார் 600 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது . கொரோனா காலகட்டத்தில் விண்வெளி ஆய்வு நடவடிக்கை மக்களிடையே மருந்துகளையும் தடுப்பூசிகளையும் கொண்டு செல்வது மிக முக்கிய பங்கு வகித்தது.

குறிப்பாக தொலைதூர மருத்துவ சேவை விண்வெளி ஆய்வுத்துறை ஒத்துழைப்பு நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை வேறு விதமாக இருந்தது. இப்போது விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வரிசையில் இந்தியா உள்ளது. அடுத்த 24 ஆண்டுகளில் உலகின் முதன்மை தேசமாக இந்தியா விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் உருவெடுக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

SOURCE : DAILY THANTHI

Similar News