கிராமப்புற மகளிர் மேம்பாட்டுக்கு மாஸ் திட்டம்: அசத்தும் மத்திய அரசு! பெண்கள் ஹேப்பி!
கிராமப்புற பெண்கள் உட்பட பெண்களின் பாதுகாப்பு, மற்றும் அதிகாரமளித்தலுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. அரசியலமைப்பின் 73வதுதிருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் மூன்றில்ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் 14.50 லட்சத்துக்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர், இது மொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சுமார் 46% ஆகும். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள அரசு அவ்வப்போது பயிற்சி அளித்து வருகிறது.
சிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுமார் 9.00 கோடி பெண்கள் சுமார் 83.5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர், அவை கிராமப்புற சமூக-பொருளாதார நிலப்பரப்பை பல புதுமையான மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள வழிகளில் மாற்றி வருகின்றன, மேலும் பிணையில்லா கடன்கள் உட்பட அரசாங்க ஆதரவையும் பெறுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005 திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3.20 கோடி பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் 11.00 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டுதல், 'உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சுமார் 9.58 கோடி பெண்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் 'ஜல் ஜீவன் மிஷனின்' கீழ் 19.46 கோடி கிராமப்புற குடும்பங்களில் 12.59 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் குடிநீர் இணைப்புகள் மூலம் இணைத்தல் ஆகியவை பெண்களின் பணிச்சுமை மற்றும் பராமரிப்பு சுமையைக் குறைப்பதன் மூலம் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன.
Input From: ANI