கோவில்களுக்கு முன் தூக்கிலிட்டு எரிப்போம் - கேரளா பேரணியில் முஸ்லிம் லீக் கோஷம்!

Update: 2023-07-27 01:53 GMT

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட்டில் நடைபெற்ற போராட்டத்தில் முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவான இளைஞர் லீக் உறுப்பினர்கள் பிரிவினை வாத கோஷம் எழுப்பினார். 

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து, காசர்கோடு மாவட்டத்தின் கன்னங்காடு என்ற இடத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணியினர் பேரணி நடத்தினர்.

அப்போது, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் சிலர் கோஷங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அப்துல் சலாம் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் தான் உன்னை கோவில்களுக்கு முன் தூக்கிலிட்டு எரிப்போம் என்ற கோஷத்தை முன் வைத்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காசர்கோடு எஸ்பி வைபவ் சக்சேனா கூறுகையில், மதத்தின் பெயரால் பல்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது தொடர்பான பிரிவு 153 (ஏ) இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார். 

முஸ்லீம் லீக் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் பி.கே.பெரோஸ் கூறும்போது, ​​“மணிப்பூர் ஒற்றுமை பேரணியின் போது வெறுப்பு முழக்கங்களை எழுப்பியதற்காக கண்ணங்காடு நகராட்சியை சேர்ந்த அப்துல் சலாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார். 


Similar News