நாட்டின் நகர்ப்புறங்களில் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக பதப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு 2014-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கியது. 100 சதவீதம் பிரித்தல், வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரித்தல் மற்றும் அறிவியல் பூர்வமாக, பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான செயல்பாடுகளின் மூலம் அனைத்து நகரங்களும் குப்பையில்லா நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டு நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டம் 2021 அக்டோபர் 1 அன்று ஐந்து ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட்டது.
அனைத்து பாரம்பரிய குப்பைக் கிடங்குகளையும் சரிசெய்து அவற்றை பசுமை மண்டலங்களாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த ரூ.1,41,600 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.36,465 கோடியாக இருக்கும். மீதமுள்ள தொகையை பயனாளிகளின் பங்களிப்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் செலுத்துவார்கள்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்கள் தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்து பல்வேறு நகரங்களை குப்பை இல்லாத நகரங்களாக மாற்றி வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலங்களாக விளங்கும் பகுதிகளில் குப்பைகளை நீக்குவதற்கு பிரத்தியேகமாக வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News