'என் தாய் என் தேசம்' என்ற மிகப்பெரிய பிரச்சாரம்.. பிரதமர் முன்வைத்த வேண்டுகோள்..
கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ஒவ்வொரு வீடுகளிலும் சுமார் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை ஏற்றினார்கள். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சுதந்திர தின தந்து வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருக்கிறார். பிரதமர் மோடி அவர்கள் மாதம் தோறும் ஞாயிற்றுக்கிழமை கடைசி வாரத்தில் மனதின் குரல் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் அவர் உரையாற்றினார். அப்பொழுது பருவமழை மாத ஜூன் மாதம் என்று அழைக்கப்படுகிறது.
அதனால் இந்த மாதத்தில் இயற்கை சீற்றங்களால் மக்கள் எண்ணற்ற கவலைகளையும் சிறப்புகளையும் தற்போது வரை அனுபவித்து வருகிறார்கள். யமுனை ஆறு பொங்கி வழிந்து இருக்கிறது. அதே சமயத்தில் கூட்டு முயற்சியின் வலிமையாக மக்கள் நிரூபித்து விட்டார்கள், உள்ளூர் மக்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனைவரும் இணைந்து நிவாரண பணிகளை இரவு பகலாக செய்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்தபடியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் அனைவருக்கும் சுதந்திர தினம் எனவே அவற்றை நெருங்குவதற்கு முன்பு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்கு முன் "என் தாய் என் தேசம்" என்று மிகப்பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டு மக்களுக்காக உயிர் நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் நடத்தப்படும் அவர்கள் நினைவாக லட்சக்கணக்கான கிராம ஊராட்சிகளில் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News