தென் மாநில எம்.பிகளை சந்தித்த பிரதமர்.. மாஸ்டர் பிளான் உடன் தயாராகும் பா.ஜ.க..
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட தென்மாநிலங்களைச் சேர்ந்த 48 எம்.பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை இருக்கிறது. 2024 மே மாதம் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அதற்கான முக்கிய விஷயங்களை பற்றி விவாதிப்பதற்கு இந்த கூட்டம் நடைபெற்று இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தென் மாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 48 எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை நடத்தியாக தகவல் வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள். கலந்து கொண்டு இருக்கிறார்கள் குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி, கூட்டத்தில் பேசி இருக்கிறதாகவும் தகவல் வழியாக இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சரியான தகவலகள் வெளியாகவில்லை. ஆனால் இது பாஜகவின் மாஸ்டர் பிளான் என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடுத்து வைக்கப்பட்ட முக்கிய அடி என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: News