பெட்ரோலுடன் எத்தனால்: கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியாவின் மாஸ்டர் பிளான்!

Update: 2023-08-09 04:15 GMT

பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு, 2022-23-ம் நிதியாண்டில் சுமார் 223 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், 10 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அதிகரித்து, அதனால் வாகனங்களின் மொத்த விற்பனையும் அதிகரித்துள்ளது. இவை போக்குவரத்து, எரிசக்தி மற்றும் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்க வழிவகுத்தது.

இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 என்ற அளவில் மத்திய அரசு குறைத்துள்ளது. கலால் வரி குறைப்பின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டன, இதன் விளைவாக சில்லறை விலைகள் வீழ்ச்சியடைந்தன. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிப்பதையும், நுகர்வை அதிகரிப்பதையும், பணவீக்கத்தை குறைவாக வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

உயிரி எரிபொருள்கள், பிற மாற்று எரிபொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், மின்சார வாகன சார்ஜிங் வசதிகள் போன்றவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், எத்தனால், பயோ-டீசல், பயோ-சி.என்.ஜி போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேசிய உயிரி எரிபொருள் கொள்கை, 2018-ஐ அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

E20 (20% எத்தனால் கலந்த) பெட்ரோல் என்பது 20% நீரற்ற எத்தனால் மற்றும் 80% மோட்டார் பெட்ரோல் எரிபொருள் அளவு ஆகியவற்றின் கலவையாகும். இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்குதல், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் நன்மைகளுக்காக, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பரந்த நோக்கங்களுடன் அரசு உயிரி எரிபொருளை ஊக்குவித்து வருகிறது.

Input From: ANI

Similar News