தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்தர்மேந்திர பிரதானும் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் புவனேஸ்வரில் குவி மற்றும் தேசியா பழங்குடி மொழி புத்தகங்களை வெளியிட்டனர். இந்த விழாவில் உரையாற்றிய திரு பிரதான், ஒடிசாவின் மொத்த மக்கள் தொகையில் 23% ஐ உள்ளடக்கிய 62 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர், எனவே, மாணவர்களின் பேச்சு திறன், கற்றல் விளைவு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்த அவர்களின் உள்ளூர் தன்மை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் படங்கள், கதைகள் மற்றும் பாடல்களின் உதவியுடன் கற்பிப்பது அவசியம் என்றார்.
இது தொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முதல் முறையாக, ஒடிசாவின் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒடிசாவின் பிரிக்கப்படாத கோராபுட் மாவட்டத்தில் குவி மற்றும் தேசியா பழங்குடி மொழிகளைப் பேசும் குழந்தைகளுக்காக குவி பிரைமர் மற்றும் தேசியா பிரைமர் என்ற இரண்டு விலைமதிப்பற்ற புத்தகங்களை தயாரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டு பிரைமர் (தொடக்கநிலை நூல்) களும் அந்தக் குழந்தைகளின் வலுவான கல்வி அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமின்றி, ஒடிசா பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்க்கும் என்று அவர் கூறினார்.
விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், தேசிய கல்விக் கொள்கை 2020 மிகவும் முற்போக்கான கொள்கையாகும். இது வெவ்வேறு நபர்கள் தங்கள் மனதை ஒன்றிணைத்த விரிவான ஆலோசனைகளின் விளைவாகும். இது மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநிலங்கள் மீதும் திணிக்கும் விஷயம் அல்ல. இது ஒரு பரந்த கட்டமைப்பாகும், மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதை மாற்றியமைக்க முடியும் என்றார்.
Input & Image courtesy: News