தேசிய விண்வெளி நாளை அறிவித்த பிரதமர் மோடி.. குவியும் எக்கச்சக்க பாராட்டுக்கள்..

Update: 2023-08-27 13:07 GMT

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு காரணமாக இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நேற்று காலை பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.


அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது தாம் தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.


பின்னர் நீண்ட நேரம் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் சந்திராயன் 3 தரை இறங்கி இடத்தை சிவசக்தி என்று பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி இருப்பது அனைத்து இந்திய பெண்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவிய செய்து இருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News