3 கோடியாக இருந்த குழாய் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 13 கோடியை எட்டியதை பிரதமர் பாராட்டியுள்ளர். இந்தியாவில் குழாய்கள் மூலம் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தின் நோக்கம் தான் ஜல்ஜீவன் என்ற ஒரு மிஷன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஜல்ஜீவன் மிஷின் முக்கியமான திட்டம் ஆகும். ஏழைப் பெண்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து ஒரு குடம் தண்ணீருக்காக படாத பாடு படுகிறார்கள்.
அவர்களுடைய கஷ்டத்தை போக்கும் விதமாக வீட்டில் இருந்தே அவர்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வெறும் 4 ஆண்டுகளில் 3 கோடியிலிருந்து 13 கோடியை எட்டியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் இயக்கம் மக்களுக்கு சுத்தமான தண்ணீரை கிடைக்கச் செய்வதிலும், மக்களின் வாழ்க்கை மற்றும் பொது சுகாதாரத்தை எளிதாக்குவதிலும் ஒரு மைல்கல்லாக நிரூபித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பதிவுக்குப் சமூக வலைதள எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்த அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள். கிராமப்புற இந்தியாவில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் 'ஜல் ஜீவன் இயக்கம்' ஒரு மைல்கல்லை நிரூபிக்கப் போகிறது. இது அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். அவர்களின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy: News