ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல்!!இந்தியக் கடற்படையின் வலிமை அதிகரிப்பு!!
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மும்பையிலுள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட தாராகிரி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான 6,670 டன் எடையுள்ள வலிமைமிக்க போர்க்கப்பலாகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்த போர்க்கப்பலில் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் கருவிகள் உள்ளன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மாறிவரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தாராகிரி போர்க்கப்பலின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.