மேற்கு வங்க தேர்தல் குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கள்!!
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். கூச் பெஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து காட்டாட்சி நிலவுவதாகக் கூறினார்.
மம்தா ஆட்சியில் சொத்துக்களைப் பறிகொடுக்கும் பயம் ஒருபுறம் என்றால், பாஜக ஆட்சியில் சொந்தமாக வீடும், நில உரிமையும் கிடைக்கும் என்ற உறுதி மறுபுறம் உள்ளது என்றார். மே 4-ம் தேதியுடன் மம்தா ஆட்சி முடிவுக்கு வரும் என்றும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட குண்டர்கள் மீது சட்டம் கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க NDA அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய அவர், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதி இடங்கள் பாதிக்கப்படாது என உறுதி அளித்தார்.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றவே தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.