அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசாங்கம் ஒப்புதல்!

Update: 2021-02-27 11:18 GMT

உத்தரப் பிரதேசத்தில் தற்போது அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு முன்னேற்ற வளர்ச்சியாகச் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மத்திய விமான அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.



முதற்கட்டமாக ATR-72 விமானங்களை இயக்க 250 கோடி மத்திய அமைச்சரகம் தாக்குதல் செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். உத்தரப் பிரதேச அரசாங்கம் அயோத்தி விமான நிலையத்துக்கு 'மர்யாட புருஷோத்தம ஸ்ரீராம் விமான நிலையம்' என்று பெயர் வைக்கவுள்ளது. ஏற்கனவே விமான நிலையம் கட்டுவதற்கான நிலத்தைப் பெறுவதற்கு மாநில அரசாங்கம் 1000 கோடியை ஒதுக்கியது, தற்போது சமீபகால பட்ஜெட் தாக்கலின் கட்டுமானத்திற்கு 101 கோடியை ஒதுக்கியுள்ளது.

"இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர், அவர்களும் அயோத்தியைக் காண ஆர்வமளிக்கின்றனர். அதனை அடுத்து உத்தரப் பிரதேச அரசாங்கம் அயோத்தியில் சர்வதேச விமானம் நிலையம் அமைக்க மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது," என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.


 "அதனை அடுத்து மத்திய அரசாங்கம் ATR-72 அமைக்க ஒப்புதல் அளித்து 250 கோடியை ஒதுக்கியுள்ளது," என்பதை அவர் தெரிவித்தார். மேலும் மாநில அரசாங்கம் இதற்கான வேலையைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. மேலும் விமான நிலையம் அமைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 2021 குள் அமைக்கக் காலக்கெடுவை யோகி ஆதித்யநாத் விதித்துள்ளார். புனித நகரத்தில், விமான நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் பிற திட்டங்களை யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Similar News