கேரளா ஆளுநர் ஆரிப் முகம்மது கான் சபரிமலை கோவிலில் இருமுடி கட்டி தரிசனம்!
ஞாயிற்றுக்கிழமை அன்று கேரளா ஆளுநர் ஆரிப் முஹம்மத் கான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். இவர் பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து முறைப்படி இருமுடி ஏந்தி ஐயப்பன் கோவில் சாலை வழியே நடந்து சென்று தரிசனம் செய்தார்.
ஆளுநரை வள்ளியா நாடா பந்தலில் வைத்து, திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவரும் மற்றும் வழக்கறிஞருமான N வாசு, தேவஸ்தான வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் K S ரவி மற்றும் தேவஸ்தான ஆணையர் திருமேனி ஆகியோர் ஆரிப் முஹம்மதை வரவேற்றனர்.
படிபூஜைக்கு பிறகு ஆளுநர் ஆரிப் முகம்மது சபரிமலையில் தெய்விக பதினெட்டு படியைக் கடந்து சென்று கடவுள் ஐயப்பனைத் தரிசனம் செய்தார். திங்கட்கிழமை காலையும் ஆளுநர் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்கிறார். பின்னர் ஆளுநர் ஆரிப் முகம்மது, மாலிகாபுரம் கோவில் வளாகத்தில் சந்தன மரக் கன்றுகளை நடவுள்ளார்.
பின்னர் அவர் புன்யம் பூங்காவனம் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார், அதன்பின்னர் மீண்டும் பம்பைக்குத் திரும்பவுள்ளார். கோவிலுக்கு ஆளுநர் தனது இளைய மகன் கபீர் முகம்மது கானுடன் உடன் வந்திருந்தார்.
source: https://www.organiser.org/Encyc/2021/4/12/Kerala-Governor-Arif-Mohammad-Khan-Visits-Sabarimala-Temple-with-Irumudi.html