திரிபுரா : 100% கொரோனா தடுப்பூசி இலக்கை சாதித்த இரண்டு கிராமங்கள்!

Update: 2021-06-23 13:11 GMT

இந்தியாவில் தற்போது குறைந்து வருகின்ற கொரோனா பாதிப்புகளுக்கு முதல் காரணமாக தடுப்பூசி என்ற ஒன்று தான் காரணம் என்பதை அனைவராலும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களுடைய மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் அந்த வகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை ஏற்கனவே சில கிராமங்கள் நிறைவேற்றியுள்ளனர். 


அந்த இடத்தில் தற்பொழுது, திரிபுராவில் உள்ள 2 கிராமங்களில் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான 2 நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், வடக்கு திரிபுரா மாவட்டம் மங்கள்காலி கிராம பஞ்சாயத்திலும், செபாகிஜலா மாவட்டம் பூர்ண சண்டிகார் கிராம பஞ்சாயத்திலும் தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டதாக முதலமைச்சர் பிப்லப்குமார் தேவ் அவர்கள் தகவல் தெரிவித்தார்.


இதுபோல், மாநிலம் முழுவதும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று அவர் கூறினார். அந்த 2 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அனைவரும் ஒத்துழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு தங்களுடைய சுற்றத்தாருக்கு தொற்று பரவ விடாமல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Similar News