ஒரே நாளில் 1000 MT ஆக்சிஜெனை இந்திய ரயில்வேயின் ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் வழங்கியுள்ளது!

Update: 2021-05-18 13:13 GMT

கொரோனா தொற்றின் காலத்தின் இரண்டாம் அலையில் தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜென் வழங்கும் சேவையை இந்திய ரயில்வே செய்து வருகின்றது. இன்று ஒரே நாளில் தனது ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் மூலம் 1000 மெட்டிரிக் டன் ஆக்சிஜெனை வழங்கியுள்ளது.


ரயில்வே இதுவரை 11,030 மெட்டிரிக் டன் ஆக்சிஜெனை 675 டேங்கர் மூலம் 13 மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 800 MT ஆக்சிஜெனை ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் வழங்கிவருவதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் டக்டே சூறாவளி நகரும் போதிலும், குஜராத் ராஜ்கோட்டில் இருந்து ஐந்து ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் டெல்லிக்குப் புறப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் நாட்டில் ஆக்சிஜென் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்திய ரயில்வே ஏப்ரல் 24 இல் ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜென் வழங்கத் தொடங்கியது.

இதுவரை 175 ஆக்சிஜென் எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை முடித்து ஆக்சிஜெனை வழங்கியுள்ளது. ரயில்வே அமைச்சகம் உரிய நேரத்தில் ஆக்சிஜெனை கொண்டு சேர்க்க புதிய வழித் தடங்கள் மற்றும் அதிக வேகத்தை உறுதி செய்கிறது. பல்வேறு பிரிவுகளில் தொழில் மாற்றங்களுக்கான நேரம் 1 நிமிடமாகக் குறைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 2,63,533 தொற்று பாதித்துள்ளது மற்றும் 4,329 இறப்புகள் பதிவாகியுள்ளது.

source: https://www.businesstoday.in/current/economy-politics/covid-19-railways-oxygen-expresses-deliver-1000-mt-of-medical-oxygen-in-a-day/story/439387.html

Similar News