ஒரே மாதத்தில் 10.80 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி : சீரம் இந்தியா சாதனை!

Update: 2021-06-28 07:15 GMT

கொரோனா காலத்தில் நமது இந்திய நாட்டில் 'கோவாக்ஸின்' மற்றும் 'கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் பல ஆராய்ச்சிக்கு பின் தயாரித்து உற்பத்தி செய்து வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 10.80 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், பல்வேறு வளர்ந்த நாடுகளும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவன இயக்குநர் பிரகாஷ்குமார் சிங், கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு எழுதிய கடிதத்தில், '6.5 கோடியாக உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் உற்பத்தி, ஜூன் மாதத்தில் 9 கோடி முதல் 10 கோடியாக அதிகரிக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (DCGI) சீரம் நிறுவனம் இன்று அளித்துள்ள தகவலில், "நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை 45 தொகுதிகளாக, 10.80 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது." சீரம் இந்தியா நிறுவனத்தின் இந்த செயலை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News