தமிழகத்திற்கு ஜாக்பாட்: இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு திறந்து வைத்தார் பிரதமர்!
ரூபாய் நான்காயிரம் கோடி மதிப்பிலான 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு திறந்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாட்டில் பல்வேறு நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என அணைத்து துறைகளும், உலக வளர்ந்த நாடுகளே வியக்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் தற்பொழுது இருபத்தி ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5125 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்திற்கு, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், 1450 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உருவாக்கப்பட்ட இக் கல்லூரிகளை, இன்று பிரதமர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த 11 மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ளது.
தற்பொழுது இந்த 11 மருத்துவ கல்லூரிகள் திறந்ததால் தமிழக மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெரிதும் உதவிகரமாக அமையும் என்று பலரது கருத்தாக இருந்து வருகிறது.