ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்!! 12.6 பில்லியன் டாலர்களை சேமித்த இந்தியா!!
ரஷ்யா மற்றும் உக்கிரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது.
ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும் அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளாதார ரீதியில் உதவுகிறது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனினும் கூட தன்னுடைய சொந்த எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்தியா இதுபோன்று செயல்பட்டு வருவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 39 மாதங்களாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததன் மூலம் 12.6 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்க டாலர்களை சேமித்து இருப்பதாகவும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கியதால் தற்பொழுது கச்சா எண்ணெயின் விலை உயராமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யாமல் இருந்தால் அதற்கான செலவு பல மடங்காக ஆகி இருக்கும் எனவும், இதனால் தற்பொழுது மத்திய அரசு பலனடைந்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
என்னதான் அமெரிக்கா நாடு இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் கூட இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் தெளிவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.