மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Update: 2023-02-01 06:16 GMT

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை. ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் உதவித் தொகுப்பு உருவாக்கப்பட்டு, MSME உடன் ஒருங்கிணைக்கப்படும். இது கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த உதவும்.

பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். ரயில்வே துறைக்கு ரூ2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. சாலை கட்டமைப்புகளுக்கு ரூ70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

Similar News