பெருந்தொற்றை எதிர்த்துப் போராட மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். இந்தியாவில் தற்பொழுது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசின் முயற்சியால் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. சிறார்களுக்கான தடுப்பூசி எப்பொழுது என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அதில் ஒன்று " ஜனவரி 3 முதல் 15 வயது முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும்" என்பதே.
சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து பல முக்கிய தகவல்களை கோவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளதாவது : கோவின் செயலி மூலம் தடுப்பூசி போடும் சிறுவனின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக ஆதார் அட்டை இல்லாத பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழங்கி உள்ள மாணவர் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் "சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும்" என்ற முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.