உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்கும் மத்திய அரசு! என்னென்ன மருந்துகள் தெரியுமா?

Update: 2022-01-28 06:55 GMT

நீரிழிவு நோய் மற்றும் பாக்டீரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்கின்ற பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

அதன்படி இதய கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்று உட்பட மிக முக்கிய நோய்களுக்காக மக்கள் அதிகளவு பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மருந்து வாங்குவதற்கு மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்படுகின்றனர். வசதி படைத்தவர்கள் நோயை குணப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் வசதி இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி சில மருந்துகளை தேசிய அளவிலான அத்தியாவசிய மருந்துகளாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறாத சில அத்தியாவசிய மருந்துகளின் விலையும் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த தேசிய மருந்துகள் பட்டியிலில் இணைக்க உள்ளது. இதனால் விரைவில் முக்கியமான மருந்துகளின் விலை வெகுவாக குறையும். இதனால் ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News