மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று வாசிக்கவுள்ள பட்ஜெட் உரையுடன் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும். காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.
கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்தப் பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடப்பாண்டு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.