இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2023-24 மத்திய பட்ஜெட்டை நாட்டின் இரண்டு முக்கிய பெண்கள் முன்னெடுக்கிறார்கள். நாடு விடுதலை அடைந்த பின் நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் ஜனாதிபதியாக பெண் உரையாற்ற, மற்றொரு பெண் நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல் முறையாகும்.
குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை அலங்கரிக்கிறார்கள்.பெண்கள் தங்கள் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் போராடி வருகின்றனர்.இந்த சூழலில் சமீப காலங்களில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
பெண்கள் முன்னேற்றத்தின் முன்மாதிரியாக இருக்கும் இரண்டு முன்னணி வலிமையான பெண்கள் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பது பெருமைப்படத்தக்க விஷயம் என்றே சொல்லலாம்.