டெல்லி : கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம், ஒரே நாளில் போடப்பட்ட 1.6 லட்சம் தடுப்பூசிகள்!

Update: 2021-07-05 01:15 GMT

இந்தியாவில் தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை உருவாகும் என்ற சூழ்நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்று ஒரு திட்டத்தை கையில் எடுத்தால் தான் பின்வரும் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். எனவே பாதிப்பதும் எண்ணிக்கை குறைப்பதற்காக பல்வேறு அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.


டெல்லியில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,60,738 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அவர்களில் 1,30,487 பேர் முதல் டோஸ், 30,251 பேர் இரண்டாவது டோஸ் போட்டு கொண்டனர். இதுவரை மொத்தம் 82 லட்சத்து 12 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என தெரிவித்து உள்ளது. இதுபோக இன்னும் 2 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவற்றில் 2.68 லட்சம் கோவேக்சின் மற்றும் 2.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. 


எனவே பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசு எடுத்து வருகிறது. வர இருக்கும் அலைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது. 

Similar News