இந்திய இறையாண்மையை கேலி பேசிய 16 யூட்யூப் சேனல்களை அதிரடியாக தூக்கிய மத்திய அரசு!
இந்திய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட 16 யூட்யூப் சேனல்களை, தகவல் ஒளிபரப்புத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2014'ல் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் வரிசையில், இந்திய பாதுகாப்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 22 யூடியூப் சேனல்களுக்கு ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்தது.
இதன் தொடர்ச்சியாக, 60 கோடிகளுக்கு அதிகமான பார்வையாளர்கள் கொண்ட 16 யூடியூப் சேனல்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதில் 10 யூடியூப் சேனல்கள் இந்திய நாட்டில் இருந்தும், 6 சேனல்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஒத்துவராத யூடியூப் சேனல்களை முடக்கி வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளை, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.