"கர்ப்பிணி பெண்கள், 18 வயதுக்கு கீழானவர்களுக்கு 2DG மருந்து இல்லை" - DRDO!

Update: 2021-06-01 12:29 GMT

DRDO அறிமுக படுத்திய 2DG கொரோனா சிகிச்சை மருந்தை கோவிட் - 19 நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்த DCGI  ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் DRDO இந்த மருந்தின் பயன்பாட்டிற்கான  வழிகாட்டுமுறைகளை வெளியிட்டது.


இது குறித்து DRDO தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறும்போது "மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு 2DG மருந்தை அதிகமாக பத்து நாட்களுக்கு மருத்துவர்கள்  அவர்களுக்கு பரிந்துரைக்கலாம். தீவிர சர்க்கரை நோய், இருதய  பிரச்சனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் ஆகியோருக்கு இந்த மருந்தை பரிந்துரைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 18 வயது கீழே உள்ளவர்களுக்கு இந்த 2DG மருந்தை பரிந்துரைக்க கூடாது. 2DG மருந்து தேவைப்படும் மருத்துவமனைகள்  டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்தை தொடர்பு கொள்ளலாம் ,மேலும் "2DG@drreddys.com"  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்." என்று DRDO வெளியிட்டுள்ள பயன்பாட்டு முறைகளில் குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News