கிராமங்களில் மின் பாதை இணைப்பு திட்டம் : 19 ஆயிரம் கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போது சுமார் 3 லட்சம் மதிப்பிலான மின் திட்டங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்கள் பலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படுகிறது. எனவே கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் மின்சார வசதி கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது கிராமங்களில் உள்ள மின் பாதை இணைப்புகளை நகரங்களோடு இணைக்கப்படும் அதன் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும்.
அதேபோல, தற்போது உள்ள மின்கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வரும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்கும் இத்திட்டத்திற்கு சுமார் ரூ.19,041 கோடியில் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்பாதைகள் மற்றும துணை மின்நிலையங்களை அமைப்பது தொடர்பாகவும், விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கிராமங்களில் அதிகமான மின்சாரம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதும் முக்கிய நோக்கமாக உள்ளது.