கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்க்கான கால இடைவெளியை குறைக்க ஆலோசனை.!

Update: 2021-06-17 12:32 GMT

இந்தியாவில் தற்பொழுது போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் கால அளவை குறைக்க பல்வேறு ஆலோசனைகளை நடந்து வருகின்றது. இதில் கோவாக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசம் 28 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. கோவிஷீல்டுக்கான கால அவகாசத்தை 4-8 வாரங்களாக இருந்தது. பின்பு 12 -16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் N.K.அரோரா அவர்கள் இதுகுறித்து கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். 


ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை தற்பொழுது பிரிட்டன் அதிகளவு பயன்படுத்துகிறது. அங்கு 2 டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையே 12 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் உருமாறிய ஆல்பா வகை வைரசை பிரிட்டன் நாடு வெற்றிகரமாக எதிர்கொண்டு மீள முடிந்தது. எனவே இவற்றின் அடிப்படையில் தான், நம் நாட்டிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அவகாசத்தை, 12-16 வாரங்களாக உயர்த்தினோம் என்று அவர் கூறினார். 


இது குறித்து பிரிட்டன் சுகாதார துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "12 வார இடைவெளியில் தடுப்பூசி போடுவதால், அதன் செயல்திறன், 88% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி 33% பாதுகாப்பையும், இரண்டு டோஸ், 60% பாதுகாப்பையும் அளிப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அவகாசத்தை, மீண்டும், 4-8 வாரங்களாக குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

Similar News