காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

Update: 2021-07-17 01:45 GMT

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள டன்மர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டன்மர் பகுதியில் உள்ள அலாம்டர் காலனியில் பதுங்கி இருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.


இது குறித்து காஷ்மீரின் IGP விஜய் குமார் கூறுகையில் " இன்று ஸ்ரீநகரில் உள்ள டன்மர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இது வரை 78 பயங்காரவாதிகளை காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்  செய்துள்ளனர். இதில் 39 பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.


மேலும் கொலை செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் சென்ற மாதம் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் சம்பந்த பட்டவர்கள். அவர்களின் செயல்பாடுகளை பல நாட்கள் நாங்கள் கண்காணித்து வந்தோம்.   நேற்று வந்த உறுதியான தகவலின் அடிப்படையில் காவல் துறை மற்றும் CRPF அதிகாரிகள் இணைந்து அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை சரணடையுமாறு கேட்டு கொண்டனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் அதிகாரிகளை நோக்கி சுட தொடங்கினர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் இரண்டு பேரும் சுட்டு கொல்லப்பட்டனர்." என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News