நிதியமைச்சர் சீதாராமன் உரையுடன் தொடங்கியது 2023-24 பட்ஜெட்!

Update: 2023-02-01 05:34 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை உரையை தொடங்கினார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

லோக்சபா தேர்தல்2024ல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி வரை 27 அமர்வுகள், பட்ஜெட் தாள்களை ஆய்வு செய்ய ஒரு மாத கால இடைவெளியுடன் நடைபெற உள்ளது. 


Full View


Similar News