வெடிகுண்டுக்கு நடுவிலும் அசராமல் 219 மாணவர்களை அழைத்து வந்த இந்தியா!

Update: 2022-02-26 12:05 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கித்தவித்த 219 மாணவர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மூன்று நாட்களாக ஆக்ரோஷமான போர்களை நடத்தி வருகின்றது. வான்வெளி, கடற்படை, மற்றும் தரைப்படை ஆகிய மூன்று வழிகளை பயன்படுத்தி உக்ரைன் மீது கடுமையான போரை தொடுத்து வருகிறது. இந்தியாவில் இருந்து படிக்க சென்ற மாணவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் சென்றவர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைனில் மாட்டியுள்ளனர்.

அவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகின்றார். அதற்கான முதல் வேளையாக ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்திய மாணவர்கள் நிலை குறித்து எடுத்துரைத்தார். அவரும் அதனை முழுமையாக கேட்டு எவ்வித பாதிப்பும் வராது என்ற உத்தரவாதத்தை அளித்தார்.


இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் உக்ரைனில் உள்ளவர்களை பேருந்து மூலமாக மீட்டு அருகாமையில் உள்ள நாட்டிற்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. அதன்படி உக்ரைனில் இருந்து 219 மாணவர்கள் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News