உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் : இந்தியாவை சேர்ந்த 22 பல்கலைக்கழகங்களுக்கு இடம்.!

Update: 2021-06-10 12:39 GMT

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறப்பாக கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்களில் சுமார் 1000 பல்கலைக் கழகங்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மதிப்பீட்டு பட்டியலைக் கொடுத்து வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது முதல் முறையாக QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் 1,000 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்திய இளங்கலை பொறியியல் திட்டத்தின் அடிப்படையில், இப்பல்கலைக்கழக தரவரிசை மதிப்பீட்டிற்கு தகுதியுடையதாக மாறியுள்ளது. மேலும் தரவரிசையில் 561-570 இடத்தில் உள்ளது.


இந்த தரவரிசை இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்கும் நிறுவனங்களை மட்டுமே கருத்தில் கொண்டு மதிப்பிடுகிறது. கடந்த வருடம் இந்தியாவில் மொத்தம் 21 கல்லூரிகள் இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். ஆனால் தற்போது 22 கல்லூரிகள் ஆயிரம் பட்டியல்களில் தற்போது உள்ளன. கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர் மற்றும் மெட்ராஸ் IIT இந்த தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதன்முறையாக 1000 உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் நுழைகிறது. இந்த தரவரிசையில் IIT பம்பாய் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் உலக தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 177வது இடத்தை பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News