பிழையை கண்டுபிடித்ததற்காக இந்திய பெண்ணிற்கு 22 லட்சம் சன்மானம் : மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Update: 2021-06-30 12:35 GMT

பெரிய நிறுவனத்தில் உள்ள பிழைகளை கண்டுபிடித்த அந்த நிறுவனத்திடம் யார் கூறுகிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படுகிறது. தற்போது உள்ள நவீன தொழில்நுட்பம் உலகில் பல்வேறு வகையான பிழைகள் ஏற்படுகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு நிறுவனங்கள் நேரத்தை செலுத்துவதற்கு நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் தலைநகரான நியூ டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். 20 வயதாகும் இந்த இளம்பெண் தற்பொழுது இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இதுவும் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது மேப் மை இந்தியா நிறுவனம். 


மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு அதிதீ சிங்க்கு முகநூல் நிறுவனம் ரூபாய் 5.5 லட்சம் தொகையை பரிசாக வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் REC என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


இதன் காரணத்தினால் தான் இந்த இளம் பெண்ணை பாராட்டும் நோக்கத்தில் இவருக்கு 30 ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 22 லட்சம் ரூபாய் ஆகும். இளம் வயதில் அதீத திறமை கொண்ட இளம்பெண் அதிதீ சிங்கின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பில் இருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

Similar News