ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கடைகோடி மக்களுக்கும் சேவை உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பாதால், இந்திய உலக நாடுகளின் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய பொருளாதரம் கொண்ட நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி முதலிடத்தில் உள்ளது.
20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறைக்கு 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் ஸ்டாட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும். சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.