"அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களுடன் செயலாற்றி வருகிறது மத்திய அரசு!" குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள் :

Update: 2022-01-31 07:10 GMT

இந்திய நாட்டின் பட்ஜெட் நாளை தாக்கல் ஆகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.



"இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் பட்ஜெட்"  குடியரசுத் தலைவர் உரைக்கு முன்பு, பாராளுமன்ற வளாகத்தில்  பிரதமர், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதையடுத்து, அனைவரும் குடியரசுத் தலைவரின் உரைக்காக காத்திருக்கையில். 


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரை படை சூழ பாராளுமன்ற வளாகத்திற்குள் வந்து உரையை தொடங்கினார், அவரது உரையின் முக்கிய அம்சங்களாக:

முந்தைய காலங்களைவிட இன்று இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் சம நிலை இருக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணம் அதை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

குழாய் மூலம் 6 கோடி ஏழைகளுக்கு  குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களுடன் செயலாற்றி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசு முத்தலாக் முறையை ரத்து செய்தது 

கொரோனா'வை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டு குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது. 


Similar News