அசத்தும் மத்திய அரசு.! கொரோனாவால் இறந்த 26 பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய்..!
கோவிட்- 19 தாக்குதலால் இறந்த 26 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கான ஒப்புதலை நேற்று மத்திய அரசாங்கம் வழங்கியது. முன்னதாக கோவிட்- 19 தாக்குதலால் இறந்த 41 பத்திரிகளரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிதி உதவியை தற்போது 67 குடும்பத்திற்கு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் திரு.அமித் காரே தலைமையில் பத்திரிகையாளர் நல திட்டக்குழு சார்பாக நேற்று அந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்ததோடு, அவர்களுக்கு ஒதுக்கிய நிதி உதவியும் வழங்கியது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேக்கரின் வழிகாட்டலின்படி அமைச்சகம் மற்றும் அச்சகம் தகவல் பணியகம், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் இறந்த பத்திரிகையாளர்களின் தகவல்களை சேகரித்து அவர்களுடைய குடும்பத்திற்கு தேவையான உதவிகளை பத்திரிகையாளர் நலத்திட்டம் சார்பாக வழங்க தொடங்கியுள்ளது.
இந்த பணியகம் சார்பாக கோவிட்- 19 மூலமாக இறந்த பத்திரிகையாளரின் குடும்பத்தை நேரடியாக அணுகி அவர்களை இந்த திட்டத்திற்கு வழிகாட்டி அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்குமாறு செய்கின்றனர். நிதி உதவிக்கான விண்ணப்பத்தை பெற வாரம் ஒரு முறை அவர்களை சந்திக்க இந்த குழு முடிவு எடுத்துள்ளது.