மாஃபியாக்களிடம் இருந்து ரூ.268 கோடி சொத்துக்கள் அதிரடியாக பறிமுதல் செய்த உ.பி அரசு
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. அங்கு முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றார். இதனால்தான் தற்போது இரண்டாவது முறையாகவும் அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது. முதலில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னுரிமை அளிக்கிறார். ரவுடிசம் செய்பவர்களை கைது என்கவுன்டரிலும், அல்லது சிறையிலும் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாஃபியாக்களிடம் இருந்து ரூ.268 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து அம்மாநில உள்துறை கூடுதல் செயலாளர் அவனிஷ் கூறியுள்ளார்.
மேலும், எந்த சொத்தையும் மாஃபியாக்களிடம் இருந்து பறிமுதல் செய்யும்போது, கட்டுமானம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதனை ஆராய்ந்த பின்னரே அவை அழிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியின் நிதி ஆதாரத்தை கைப்பற்றினால், அது அடிவரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும், குற்றங்கள் ஒழியும் வரையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Polimer