புத்தல்கண்ட் விரைவு சாலையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! 29 மாதங்களில் முடிக்கப்பட்ட திட்டம், எப்படி சாத்தியமானது?

Update: 2022-07-17 10:15 GMT

உத்தரப் பிரதேசம்: 14,840 கோடியில், 296 கிலோமீட்டர் தூரம் கொண்ட புத்தல்கண்ட் விரைவு சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.


கடந்த 2014இல் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருகின்றன. நாட்டில் அதி நவீன போக்குவரத்துச் சாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடிகள் முதலீட்டில் பல்வேறு விரைவுச்சாலை திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.


அந்த வரிசையில், தேசிய அளவில் பேசுபொருளான திட்டம்தான் "உத்தரப்பிரதேச புத்தல்கண்ட் விரைவுச் சாலை திட்டம்".


14,840 கோடியில் 296 கிலோ மீட்டர் தூரம் கொண்ட விரைவுச் சாலை திட்டமாக இது இருக்கிறது. சித்ரகூட் மாவட்டத்திலிருந்து எட்டாளா மாவட்டம் வரை இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், வெறும் 29 மாதங்களிலேயே முடிக்கப்பட்டு, நேற்று பிரதமர் மோடியால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


இத் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றுகையில் "இந்த விரைவுச்சாலை திட்டத்தால், சித்ரகூன்ட் டெல்லி இடையேயான பயணம் 3 முதல் 4 மணி நேரம் குறையும். இந்த விரைவு சாலை மூலம் பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு பெருகும். இந்திய இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே அரசின் ஒரே குறிக்கோள். தேர்தல் நேரத்தில் இலவசம் போன்ற திட்டங்களை தருவோர் ஆட்சிக்கு வந்தபின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த மாட்டார்கள்"என்று கூறினார்.


இத் திட்டத்தை தொடங்கியபொழுது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

News 18 Tamil

Similar News