ஸ்பெயின் நாட்டின் தயாரிக்கப்பட்டு வந்த இந்திய விமானப் படையின் முதல் ஏர்பஸ் சி - 295 விமானம் இந்தியா வந்தடைந்தது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் இந்தியா ஏர்பஸ் சி - 295 ரக விமானங்களை தயாரிக்க ஆர்டர் கொடுத்தது. இந்தியா கொடுத்த ஆர்டரின் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்திய விமானப்படைக்கான முதல் சி - 295யின் வெள்ளோட்ட நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கடந்த மே மாதங்களில் செய்திகள் வெளியானது. அப்பொழுது இது குறித்து ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் ஜீன் பிரைஸ் டுமான்ட், இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டு வரும் முதல் சி - 295 விமானத்தின் பயணங்கள் வெற்றிகரமாக நடைபெற உள்ளது. உலகிலேயே இந்திய, விமானப்படை சி - 295 விமானத்தில் மிகப்பெரிய ஆபரேட்டராக உருவாகி வருகின்ற நிலையில் இந்திய விமான படையில் இந்த திட்டம் அதிக செயல்பாட்டு திறன்களையும் எங்கள் உறுதிபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டிலிருந்து வதோதரா விமான நிலையத்திற்கு இந்திய விமானப் படைக்காக வாங்கப்பட்ட முதல் சி - 295 விமானம் வந்து சேர்ந்ததுள்ளது. வருகின்ற 25-ம் தேதியில் இந்த விமானம் பாதுகாப்பு அமைச்சரால் விமான படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Source - The Hindu & Dinamalar