மகிழ்ச்சி செய்தியை சொன்ன எய்ம்ஸ் இயக்குநர் : 3ஆம் அலை மோசமானதாக இருக்காது!
ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை மற்றும் பழக்கவழக்கங்களை இந்த கொரோனா நம்மிடம் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நம் மறந்த பல நல்ல விஷயங்களை நாம் இன்று செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் ஒவ்வொரு அலையின் போதும், பாதிப்புகளில் எண்ணிக்கை அதிகரித்து பின் குறைந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் இதுபற்றி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுவதாவது, கொரோனா மூன்றாவது அலை உருவானால், அது தற்போது நடைபெறும் இரண்டாவது அலையைப் போல மிக மோசமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அளித்துள்ள பேட்டியில், கொரோனா தொற்றையும், அதன் உருமாற்றமடைந்த வீரியமான தொற்றுக்களையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. டெல்டா பிளஸ் வகை வைரஸ் மூலம் நாட்டில் மூன்றாவது அலை பரவுவதற்கான அபாயத்தை உருவாகி உள்ளது. டெல்டா வகை வைரசைக் காட்டிலும் டெல்டா பிளஸ் வைரஸ் அதிக வேகமாகப் பரவும் அபாயமும் உள்ளது. ஆனாலும், கொரோனா இரண்டாவது அலையின் போது நாம் கற்ற பாடத்திலிருந்து படிப்பினைகளை பின்பற்றி, மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டும்.
தற்பொழுது பெரும்பாலான மக்கள் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொண்டால் போதும் என பலரும் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. அனைவரும் 2வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் தவணை வெறும் 33 சதவீத பாதுகாப்பை மட்டுமே தரும். 90 சதவீத பாதுகாப்பு 2வது தவணையை செலுத்திக் கொண்டால்தான் கிடைக்கும் என்றஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.